"அரபு நாட்டு வாழ்க்கை "



"அரபு நாட்டு வாழ்க்கை " -------------------------+
தலையனைக்கு மட்டும் தான் தெரியும் - எங்கள் கண்ணீரின்
ஈரம் .


படைத்தவனுக்கு மட்டும்தான்
தெரியும் எங்கள்வாழ்கையின்பாரம்.


மனைவியோடு நேரில் பேசியதைவிட டெலிபோனில்பேசியதுதான் அதிகம்.


அடுத்த மாதம் வருகிறேன் இது -குழந்தைகளிடம் அடிகடிசொல்லும் பொய்.


ருசிக்காக உண்ணவில்லை
பசிக்காக - உண்ணுகிறோம்.


நினைவு வந்தால் -உறக்கம் இல்லை -
அசதி வந்து உறங்குகிறோம் .


உடல் மட்டும் இங்கு இருக்கு
எங்கள் மனசெல்லாம்
ஊரில் இருக்கு.


எங்களோடு போகட்டும் இந்த நரக வாழ்கை. 

அழகுபாண்டியன்.வெ

No comments: